உலக பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய கௌதம் அதானி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
146

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம் பெறுவார்கள் சர்வேஸ் அளவில் இந்தியாவின் தொழில் துறைகள் மற்றும் வணிகங்கள் உள்ளிட்டதை வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், உலகின் டாப் 10, டாப் 20, பணக்காரர்களின் பட்டியலில் இந்திய பிசினஸ் டைகூன்கள் இடம்பெற்று வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

அந்த விதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் அதானி குழுமத்தின் கௌதம் அதானி உலகின் 3வது பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான முழுமையான விவரங்களை தற்போது நாம் காணலாம்.

ப்ளூம்பெர்க் பில்லினியர் பட்டியலில் ஆசிய கண்டத்தைச் சார்ந்த ஒருவர் மூன்றாவது இடத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும். உலகளாவிய ரேங்கிங் பட்டியலில் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பிசோஸ் அவளிட்டோருக்கு அடுத்ததாக 3வது இடத்தில் கவுதம் அதானி இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலர் ஆகும்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலிருந்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு 2 51 பில்லியன் டாலராகும் இவருக்கு அடுத்தபடியாக அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு 153 பில்லியனாகும். அதானி குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானி 3வது இடத்தில் இருந்து வருகிறார்.

உலகப் புகழ்பெற்ற லக்சூரி தயாரிப்பான லூயி விட்டான் பேஷன் தயாரிப்புகளை வழங்கும் LVMH நிறுவனத்தின் இணை நிறுவனரான பெர்னாட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் வரிசையில் பின்தங்கி இருக்கிறார்.

2022 ஆம் வருடத்தில் மட்டுமே கௌதம் அதானியன் சொத்து மதிப்பில் 60 .9 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது. இது மற்ற எவரையும் விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்க இந்திய ரூபாயின் மதிப்பில் 48.50கோடி ரூபாய் ஆகும்.

உலக பணக்காரர்கள் பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது அது கௌதம் அதானி உலகின் பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார் தற்போது வெளியான பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவரான பில்கேட்சை விடவும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்திலிருக்கிறார் கௌதம் அதானி.

பில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனமான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 20 மில்லியன் டாலர் நன்கொடை வழங்க இருப்பதாக கூறியிருந்தா.ர் ஆகவே அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 115 மில்லியன் டாலர்களோடு 3வது இடத்திற்கு சென்றிருக்கிறது.

உலக பணக்காரர்களின் தரவரிசையில் 3வது இடத்தை பிடித்த அதானியால் கணிசமான மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. இந்த வரிசையில் இடம் பெற்ற முதல் ஆசிய கண்டத்தைச் சார்ந்தவர் என்ற பெருமையை அதானி பெற்றிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் முதலீடுகளில் ஜாம்பவான் என்று அறியப்படும் வாரன் பபெட் பணக்காரர் பட்டியலில் 5வது இடத்திற்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 91 வயதான வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளரை விட அதானியின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் அதானி குழுமம் பல துறைகளில் செயல்பட்டு வருகிறது விமான நிலையங்கள் முதல் பசுமை எனர்ஜி வரையில் அதானி குழுமம் கால் பதிக்காத துறையே இல்லை என்றே தெரிவிக்கலாம். அரசாங்கம் நாடு முழுவதும் பசுமை எனர்ஜியை ஊக்குவித்து வருகின்ற நிலையில், அதானி குழுமம் மாற்று எனர்ஜி வணிகத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய 60வது பிறந்தநாளின் போது கௌதம் அதானி 60,000 கோடி ரூபாயை நன்கொடை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். இந்த நன்கொடை சுகாதாரம், கல்வி மற்றும் திறன்களை வளர்ப்பதற்காக செலவிடப்படும் எனவும், அவர் கூறியிருந்தார். இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் பில்லியனர்கள் வழங்கிய நன்கொடையில் இதுவே மிகப்பெரிய நன்கொடை என்பது குறிப்பிடத்தக்கது.