Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“TVK+ADMK” மேலிடம் கொடுத்த டோஸ்.. இனி அப்படியெல்லாம் பேசாத!! விஜய் க்கு வரிந்து கட்டி ஓடோடி வந்த அதிமுக நிர்வாகி!!

Gayathri Raghuram spoke in support of Vijay

Gayathri Raghuram spoke in support of Vijay

ADMK: பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் தற்பொழுது அதிமுகவில் மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவர் தொடர்ந்து அண்ணாமலை க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது அதிமுக மட்டும் என்னை அனுமதித்தால் கட்டாயம் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதே காயத்ரி ரகுராம் தான் தற்பொழுது விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். அமலாக்கத்துறை, திமுக பல கோடி ரூபாய் டாஸ்மாக்கில் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக ஆளும் கட்சியை எதிர்த்து அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதில் இருவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ரீதியாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆளும் கட்சிக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியது ஆச்சரியமான ஒன்று. புர வாசலில் நட்பு கொண்டாடியும் பொது வெளியில் எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலையும், திமுகவின் அடுத்த அணி தான் விஜய்யின் கட்சி, அவர் வீட்டில் இருந்து வர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் தலைவர் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இப்படி தவெக பாஜக என இருவரும் மாறி மாறி திமுகவுடன் ஒப்பிட்டுக்கொண்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அண்ணாமலைக்கு எதிராக விஜய்யை ஆதரித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார், திமுக மற்றும் பாஜக இருவரும் ஒன்றுதான் அண்ணாமலையை அனுப்பி வைத்ததே திமுக தான். விஜய் சார் அப்படிப்பட்டவர் கிடையாது, அவர் எதிர்மறையை முற்றிலும் புறக்கணிப்பவர் அதேபோல திமுக பல ரீதியான வழிகளில் விஜய் சாரை சித்தரித்து தாக்க முற்பட்டது.

விஜய் சாருக்கு எதிராக youtube யில் வந்த அனைத்து தகவல்களையும் பேச வைத்தது திமுக தான். சோசியல் மீடியா போன்றவற்றின் மூலம் விஜய் சார் மீதுள்ள நபிக்கைக்கு  களங்கம் கொண்டுவர திமுக முயற்சி செய்தது என்றெல்லாம் பேசியுள்ளார்.வார்த்தைக்கு வார்த்தை விஜய்யை சார் என்று குறிப்பிடுபவர் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு எதிராக போட்டியிட தயார் என்று பேசியிருந்தார். அப்படி அவர் பேசியதற்கு மேலிடம் அவரை அழைத்து வார்னிங் செய்ததாகவும் , விஜய் – யுடன் கூட்டணி வைக்க தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் .

இந்த சமயத்தில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று பேசக் கூடாது என கூறியுள்ளனர். அதனை உணர்ந்த காயத்ரி ரகுராம், தவறை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொண்டார். அண்ணாமலை விஜய் க்கு  எதிராக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணியை உறுதி செய்ய காயத்ரி ரகுராமை அலாட் செய்ததால் இப்படி ஆதரவுக்கு முன்னோடி வந்தாரா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version