நடிகை சாவித்திரியை ஏமாற்றியது ஜெமினி மட்டுமல்ல!! மனம் திறக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர்!!

0
225
Gemini is not the only one who cheated actress Savitri!! A famous journalist opens his mind!!

1950 இல் இருந்து 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்தவர் நடிகை சாவித்ரி அவர்கள்.

அன்பு, அழுகை, சந்தோஷம், வெறுப்பு, காதல் என நவரசங்களையும் தன்னுடைய முக பாவனை மூலம் வெளிப்படுத்தும் அழகிய இளம் நடிகையாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தவர் இவர் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

அவர் மறைந்து இத்தனை காலங்கள் ஆன பின்னும் இவருக்கென இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்பது வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. இப்படி சினிமா துறையில் ராணியாக வலம் வந்தவர் உண்மையில் ஒரு ஏழ்மையான வீட்டில் பிறந்த சாதாரண பெண் ஆவார்.

இவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டதால் தன்னுடைய திறமையை பயன்படுத்தி சினிமா துறையில் மெல்ல மெல்ல நுழைந்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் அக்காலத்தில் அனைவரது மனதிலும் பதியத்தொடங்கியது.

மேலும் இவர், எம்ஜிஆர், சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன், என்.டி.ஆர், ஏ.என்.ஆர், எஸ்.வி.ஆர் போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

இவர் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பின்பு தான் இவர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு மூன்றாவது மனைவி என்ற உண்மை தெரிய வந்துள்ளது. இருப்பினும் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இவர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவித்ரியிடம் பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் இமாந்தி ராமாராவ் இவருடைய வாழ்க்கையில் நடந்த சில உண்மைகளை தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சாவித்ரியுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. ஜெமினி கணேசன் சாவித்ரியை மூன்றாவது மனைவியாக மணந்தார். அப்போது அவருக்கு அலமேலு மற்றும், புஷ்பவல்லி என இரண்டு மனைவிகள் இருந்தனர். ஆனால், இது சாவித்ரிக்கு ஆரம்பத்தில் தெரியாது என்று அவர் நடிகை சாவித்திரியின் மீது இரக்கப்பட்டு கூறி இருக்கிறார்.

எனினும் ஒரு காலத்திற்கு மேல் ஜெமினி கணேசனை சாவித்திரி பிரிந்து வாழ ஆரம்பித்துள்ளார். அச்சமயத்தில் அவரிடம் நிறைய பணம் இருந்ததால் தன்னுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார் என்றும் பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

இப்படி சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் திடீரென ஒரு அரசியல்வாதி குறிப்பிட்டார் என்றும் அவர் சாவித்திரி இடம் தன்னிடம் வந்து விடுமாறு கூறினார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு சாவித்திரி அவர்கள் மறுக்கவே, அக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதி சாவித்திரி அவர்களின் வீட்டிற்கு வருமானவரித்துறையினரை அனுப்பியுள்ளார். இதனால் தன்னுடைய சொத்துக்களை இழந்து யாருடைய துணையும் இன்றி தனிமையில் தள்ளப்பட்டார் நடிகை சாவித்திரி என்றும் பத்திரிக்கையாளர் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, தனிமையில் இருந்த நடிகை சாவித்திரி அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி குடிப்பழகத்திற்கு அடிமையாக இருக்கிறார். இதனால் அவர் தன்னுடைய கடைசி காலங்களில் கோமாவிற்கு சென்று அப்படியே உயிரையும் விட்டு விட்டார் என்றும் மனம் திறந்து பேசி உள்ளார் பத்திரிக்கையாளர் ராமாராவ் அவர்கள்.

இதில் பத்திரிக்கையாளர் ராமாராவ் அவர்கள் குறிப்பிட்ட அக்காலத்திய அரசியல்வாதி யார்? என்ற கேள்வி தற்பொழுது அனைவரின் மனதிலும் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.