மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

0
118
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு ஒருவித புரிதலுடன்
காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சில மன குழப்பங்கள் தரும் சம்பவம் நடைபெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மனக்குழப்பத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.