மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
108
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள். இன்று உங்கள் ராசியில் காலையில் பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் இருக்கார் மாலை பகை உணர் யோக ஸ்தானமாகிய சத்ரு ஸ்தானத்திற்கு வருவதால் குழந்தைகள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும்.

குடும்ப உறவு இன்று சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக உள்ளது. உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் தனி மரியாதை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு குழப்பமான சூழ்நிலை மறையும். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் காரியங்கள் இனிமையாக நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.