Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

Gemini – Today's Horoscope!! A day to improve travel opportunities!

Gemini – Today's Horoscope!! A day to improve travel opportunities!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். இன்றைக்கு அருமையான பயணங்கள் கிடைக்கும். அதன் மூலம் அனுபவமும் ஆலோசனைகளும் ஆதாயமும் வந்து சேரும். நிதி சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் சிலருக்கு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் காரியம் அருமையாக செல்லும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழப்பமின்றி செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு அனுபவமிக்க ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு பயணங்கள் ஏற்படும். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version