மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

0
97
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு நிறைந்த நாள். ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையாக உள்ளதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் சுபிட்சமான வாழ்க்கை கிடைக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.