மிதுனம்ராசி- இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

0
125
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம்ராசி- இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் ஏதாவது ஒரு விஷயங்களில் சொத்து அல்லது பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நிதி அனுகூலமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகளின் மூலம் சில நன்மைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வரலாம். உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடைபெறுவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்