மிதுனம் – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள்!!

0
97
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய காரியங்கள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவில் சிலருக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஈறாது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் சற்று விலகும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் வெகு சிறப்பாக அமையும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் எடுத்து செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பு பெற்ற மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு தெளிவு உண்டாகும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக அமையும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமை தரும் நாளாக அமையும்.