Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பமும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பமும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் ஆற்றலும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபார விஷயமாக நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட்டவுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒருவித மந்த நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் இணைந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version