Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் தெளிவும் கிடைக்கும் நாள்!!

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் குழப்பமும் மாலையில் தெளிவும் கிடைக்கும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சிறு குழப்பமும் பிற்பகலுக்கு மேல் தெளிவும் உண்டாகும் நாள். காலையில் பஞ்சாமஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சிறு குழப்பம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சந்திர பகவான் பகை உணர் யோகஸ்தானத்திற்கு மாறுவதால் தெளிவு கிடைக்கும். வருமானம் வந்து சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இடையே குழந்தைகள் மூலம் சில பிரச்சனைகள் எழலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காண்பது நல்லது. கலைத் துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு வேலைகள் அனைத்தும் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் அருமையாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு அருமையான செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version