இந்த வகுப்புக்கு நாளை வெளியாகும் பொது தேர்வு ஹால் டிக்கெட்! தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அப்போது தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.மேலும் பொது தேர்வும் நடந்து முடிந்தது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் 13 தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது.
மேலும் எழுத்து தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கும் நிலையில் செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது.அதனால் அதற்கு முன்கூட்டியே மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில் நாளை மதியம் இரண்டு மணி முதல் அரசு தேர்வுகள் இயக்கத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதமே பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் அவர்களுடைய தேர்வு விவரம்,பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முன்னதாகவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக பெறப்பட்ட நிலையில் அவற்றை சரி பார்க்கும் பணி முடிவடைந்தது.அவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் நாளை மதியம் முதல் அனைத்து பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பதிவு செய்து தரலாம் என கூறப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் செய்முறை தேர்வின் போது மாணவர்கள் ஹால் டிக்கெட் காண்பிக்க வேண்டும்.அதேபோல எழுத்துத் தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் வழக்கம் போல அனைத்து தேர்வுக்கும் ஹால் டிக்கெட் தேர்வறைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.