Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது பொதுத்தேர்வு! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதியான இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,37,311 மாணவ, மாணவிகள் எழுதவிருகிறார்கள்.

இதில் தமிழகத்தில் மட்டும் 3,081 தேர்வு மையங்களில் 3,91,343 மாணவர்கள் மற்றும் 4,31,341 மாணவிகள் என ஒட்டுமொத்தமாக 8,22,684 பேர் தேர்வை எழுதுகிறார்கள்.

இந்த தேர்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1,15 மணி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தேர்வு மையங்களில் காலை 9.45 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும் என்றும், அந்த சமயத்தில் தேர்வர்கள் தேர்வு அறைக்கு வர வேண்டும், அதனை தொடர்ந்து 9.55 மணிக்கு 2வது மணி அடிக்கப்படும் அப்போது அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் முறை கடைபிடிக்க வேண்டும்.

காலை 10 மணி அளவில் 3வது மணி 3முறை அடிக்கப்படும் அந்த சமயத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும் வினாத்தாளை மாணவர்கள் காலை 10 மணியிலிருந்து 10.10 மணி வரையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு காலை 10.10 மணிக்கு 4வது மணி 4 முறை அடிக்கப்படும் போது மாணவர்களுக்கு விடைத் தாள்கள் வழங்கப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு 5வது மணி 5 முறை அடிக்கப்படும். அப்போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்ட வேண்டும் பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றதற்கான நீண்ட மணி அடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் மாணவர்கள் தடையின்றி தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித் துறை சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து செய்திருக்கிறது. நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தேர்வை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தமிழ் தேர்வு நடைபெறவுள்ளது அடுத்ததாக வருகின்ற 9ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறவுள்ளது நாளை தினம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பமாகிறது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடக்கிறது.

Exit mobile version