மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?

0
163

இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இணையதளம் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதன்பிறகு நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக, சென்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து நேரடி வகுப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் தொடர்ச்சியாக எந்த வகுப்பினருக்கும் பள்ளிகள் செயல்படுவதில்லை, சுழற்சிமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் நோய் தொற்று காரணமாக, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டனர்.

இன்றைய சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கேள்விகள் எழுந்த சூழ்நிலையில்? உடனடியாக நிச்சயமாக பொது தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதத்தில் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

பொதுத்தேர்வை பொருத்தவரையில் மாணவர்களின் வசதிக்காக பொதுத்தேர்வு நடைபெறுவது தள்ளிப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இப்படியான சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 11 , 12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியாகும் என்றும், நேற்றையதினம் தகவல் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அவர்கள் அது தொடர்பாக எந்த விதமான உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதற்கு நடுவில் அரையாண்டுதேர்வு இந்த வருடம் கிடையாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், வழக்கமாக தேர்வு இருக்கும் காலங்களில் விடப்படும் அரையாண்டு விடுமுறையும், இருக்காது என்ற தகவலும் நேற்று வெளியாகி இருக்கிறது.