ஆக்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்

0
123
100 நாட்களுக்கும் மேலாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று இல்லாமல் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் ஆக்லாந்தில் ஆகஸ்ட் 16 அன்று 49 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மீண்டும் கொரோனா அச்சம் காரணமாக பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக  எந்தவித  கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைநடத்தவில்லை. இதையடுத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 120 உறுப்பினர்களை கொண்ட நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.