Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள பொது முடக்கம்! புதிய தளர்வுகளின் லிஸ்ட் இதோ! 

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதுதான் கொரோனா வைரஸ்.

இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்ட பொது முடக்கம் வருகின்ற 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதனால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது முடக்கத்தை வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி வரை  நீட்டித்துள்ளது மத்திய அரசு.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆறடி சராசரி விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள மத்திய அரசு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version