Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆலோசனையில் அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிர்ச்சியில் முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீண்டும் அறிவிக்கலாமா என்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தினசரி பாதிப்புகள் 1500 க்கும் கீழ் குறைந்து இருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1464 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது இதன்படி மொத்த பாதிப்பு 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 அதிகரித்திருக்கின்றது அதேநேரம் குணமானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தி 797 ஆக பதிவாகி இருக்கின்றது இதனைத்தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332 ஆக அதிகரித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 669 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் புதிதாக 14 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது தற்சமயம் 11 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 1.2 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன இந்த சூழ்நிலையில் 28 11 2020 அன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். அந்த நேரம் தமிழ்நாட்டில் தொற்று பரவலின் நிலை இரண்டாம் அலைக்கான வாய்ப்பு, டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகின்றது.

அதன் பின்னர் பல தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த வரும் காரணத்தால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவதற்கான சூழல் கிடையாது என பல தரப்பினரும் கூறி வருகிறார்கள் .அதற்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கடந்த 25ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் வைத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது

Exit mobile version