பீரியட்ஸ் அல்லாத நாட்களிலும் பிறப்புறுப்பில் இரத்தம் வெளியேறுகிறதா? பெண்களே அலட்சியம் வேண்டாம்!!
பெண்கள் தாங்கள் பூப்பெய்த பிறகு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இது மிதமான இரத்தப்போக்குடன் வழக்கமாக நிகழக் கூடிய ஒரு நிகழ்வு தான்.ஆனால் நமது இந்தியா பெண்கள் பெரும்பாலானோர் முறையற்ற மாதவிடாய் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர்.பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்க கூடிய பிரச்சனைகளை வெளியில் சொல்லத் தயங்குவதால் அவர்கள் உடல் சார்ந்த ஆபத்தை அனுபவிக்க நேரிடுகிறது.
சிலருக்கு மாதவிடாயின் போது அதிகளவு இரத்தப்போக்கு ஏற்படுகிறது.சிலருக்கு மாதவிடாய் அல்லாத காலத்திலும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனையை சந்திப்பார்கள்.இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்ச்சியின் விளைவாகும்.
உங்களின் சாதாரண மாதவிடாய் காலத்தில் வெளியேறும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும்.ஆனால் இந்த உதிரப்போக்கு மாதவிடாய் அல்லாத காலத்தில் வரும் இரத்தத்தின் நிறத்தில் வேறுபாடு காணப்படும்.
இதுபோன்ற உதிரப்போக்கு ஹார்மோன் மாற்றங்கள்,கருப்பை சுருங்கி சுவரை இரத்தமாக வெளியேற்றுதல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.இந்த அதிகப்படியான உதிரப்போக்கு அண்டவிடுப்பினால் ஏற்படலாம்.இதனை ஸ்பாட்டிங் என்று அழைப்பார்கள்.இந்த ஸ்பாட்டிங் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் இவை தொடரும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.மாதவிடாய்க்கு பிறகு ஏற்படக் கூடிய உதிரப்போக்கு உடல் நலக் கோளாறுக்கான அறிகுறிகளாகும்.இதுபோன்று மாதவிடாய் அல்லாத காலத்தில் பிறப்புறுப்பில் உதிரப்போக்கு ஏற்பட்டால் அலட்சியபடுத்தாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது.