Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உயர் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது கணவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கிய பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற மாநிலத்தை சேர்ந்த ஜேசன் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல உயர் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அபே விண்டர்ஸ் என்ற பெண் நிருபர் எழுந்து உயரதிகாரி ஜேசனை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கினார். அப்போது பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்திருந்த ஜேசனின் மனைவி திடீரென பெண் நிருபர் மீது கையில் வைத்திருந்த சோடாவை அவரது தலையில் ஊற்றினார். இதனால் அந்த பெண் நிருபரும் அருகில் இருந்த மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து உயர் அதிகாரியின் மனைவி மீது ஒழுங்கற்ற நடத்தை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரியின் மனைவி தன்னை அவமானப்படுத்திய போதும் பெண் நிருபர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version