பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெர்மனி

0
113
பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக்கப்பல்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தரம் உயர்த்தி வருகிறது. சாதாரணமாக நீர்மூழ்கிக்கப்பல்கள் நீர்மட்டத்தில் தெரியாதபடி தண்ணீருக்குள் வலம் வந்தாலும், இரண்டு நாளுக்கொருமுறையாவது கடல் பரப்புக்கு வந்துதான் ஆகவேண்டுமாம்.  பல வாரங்கள் தண்ணீருக்குள் மறைந்திருந்து தாக்க இந்த நீர்மூழ்கிக்கப்பல்களால் முடியும், தாக்கிவிட்டு தப்பிவிடவும் முடியும் என்பதால் ஜெர்மனியிடம் அந்த அமைப்பை கேட்டுள்ளது பாகிஸ்தான்.
ஜெர்மனி மறுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது… 2017ஆம் ஆண்டு, காபூலில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் குண்டு வைத்தவர்களை தண்டிக்க பாகிஸ்தான் தவறிவிட்டது. அந்த வெடிகுண்டு சம்பவத்தில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்தவர்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவு உள்ளது. ஆகவே, தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலாததாலேயே அதன் கோரிக்கையை ஜெர்மனி மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.