உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

0
154

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தம் வகுப்பு பாடங்களை கவனித்து வருகிறார்கள்.

சில கிராமப்புறத்தில் வசதிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் சேவையை பயன் படுத்த முடியாமல், பல கனவுகள் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளை கற்று கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதனால் சிலர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாது குழந்தை திருமணத்தையும், செய்து வருவதாக அதிக அளவில் புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், குழந்தை திருமணம் நடப்பதாக தெரிந்தால் அரசுக்கு முன்கூட்டியே தகவல் தருபவருக்கு ரூ.2,500 சன்மானம் தரப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

தகவல் தெரிவிக்க அங்கன்வாடிகளில் இ-மெயில் முகவரி, மற்றும் தொலைபேசி எண்கள் வைக்கப்பட உள்ளன. தகவல் கொடுப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும், பரிசு தொகையை அவர் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், கேரள அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குழந்தை திருமணம் நடப்பதை தெரிந்துகொண்டால் உடனே தகவலை பகிரவும். குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தைகளின் கனவுகளை நினைவாக்குவோம்.