இந்திய குடிமகன்கள் அனைவரும் ரேசன் கார்டு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி,கோதுமை,மலிவு விலையில் துவரை,சர்க்கரை,சமையல் எண்ணெய் உள்ளிட்டவை நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.இதை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வருகிறது.
விலைவாசி உயர்வால் ரேசன் கடைகளில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்கள் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.அது மட்டுமின்றி அரசின் பிறநலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க ரேசன் கார்டு முக்கிய ஆவணமாக்கப்பட்டுள்ளது.
1)ஆயுஷ்மான் பாரத் யோஜனா
இது ஓர் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.ரேசன் அட்டை வைத்திருக்கும் ஏழை குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.5,00,000 வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேசன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.
2)பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கும் திட்டமாகும்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ரூ.1.20 வரை மானியம் வழங்கப்படும்.இதற்கு விண்ணப்பம் செய்ய முக்கிய ஆவணமாக திகழ்வது ரேசன் கார்டு தான்.
3)பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா
இத்திட்டத்தின் மூலம் இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் எரிவாயு சிலிண்டர் வாங்கினால் மானியம் வழங்கப்படும்.இதுவரை கேஸ் இணைப்பு பெறாதவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
4)பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா
கைவினைஞர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா.கைவினைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள ரூ.3,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.அதேபோல் கருவிகள் வாங்க நிதியுதவியும் வழங்கப்படுகிறது.