உடனே ரெடியாகுங்கள்.. இந்த 100 பேருக்கு அரசு வேலை!! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!
தமிழ்நாட்டில் தற்போது சட்ட சபை கூட்டத்தொடர் விவதாம் ஜூன் 20ம் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறை சார்பாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.அந்தவகைவில் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடின் கீழ் 100 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அரங்குகளிலும் புதிததாக AC வசதி செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.இதற்காக 10 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான மானியத் தொகையானது இனிமேல் ரூபாய் 1000 லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விளையாட்டு மாணவர்கள் பெரிதும் பயன் அடைய போகிறார்கள்.
மேலும் சென்னை மாவட்டதில் உள்ள ஜவகஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தாங்கி, மாணவர்கள் தொடர் பயிற்சிகளில் பங்கேற்கும் விதமாக அங்கு புதியதாக தங்கும் விடுதி கட்டடம் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வரும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை தற்போது 2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்படுள்ளது.இது மட்டுமில்லாமல் விளையாட்டுத் துறை சம்பந்தமான பல்வேறு அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தன.