Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகப்பரு மற்றும் சரும வறட்சி நீங்க.. இந்த கசப்பு இலையை கொதிக்க வைத்து குடிங்க!!

முகத்தில் உள்ள பருக்கள்,தழும்புகள்,கரும் புள்ளிகள் மற்றும் வறட்சி நீங்க வேப்பிலையை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளை அகற்றி இயற்கையான முறையில் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்க வேப்பிலை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:

*முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

*பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள வேப்பிலையை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

*இந்த வேப்பிலை பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிடுங்கள்.அதன் பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த பானத்தை வடித்து பருகி வந்தால் முகப்பரு,கரும்புள்ளி,சரும வறட்சி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)வேப்பிலை – ஒரு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கொத்து வேப்பிலையை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வேப்பிலை சாறை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரை தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் சரும பிரச்சனைகள் அகலும்.

முகத்தில் அதிகளவு பருக்கள் இருந்தால் அதை மறைய வைக்க வேப்பிலை பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து வரலாம்.வேப்பிலை பேஸ்ட்டில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் சரும வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)தயிர் – ஒரு தேக்கரண்டி
3)கஸ்தூரி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்தால் பருக்கள்,கரும்புள்ளிகள் நீங்கும்.சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் மற்றும் பொலிவு கிடைக்கும்.

Exit mobile version