எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

0
277
Get rid of all types of itching!! Just do this!!

எல்லா வகையான அரிப்புகள் நீங்க!! இதை மட்டும் பண்ணுங்க போதும்!!

மனிதர்களின் தோலானது மிகவும் மென்மையானது. இது பலவகையான பாதிப்புகளை சந்திக்கிறது. அதில் ஒன்றுதான் அரிப்பு. ஒருவருக்கு எப்படி அரிப்பு எப்படி ஏற்படுகிறது என்றால் வெளிபுற சூழ்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் மனிதனின் தோல்களில் ஏற்படுத்தும் தாக்குதல்கள் அரிப்பாக உணரப்படுகிறது.

உடலை, குளிக்காமல், தூய்மை இல்லாமல் வைத்து இருப்பவர்களின் உடலில் உள்ள வியர்வை, ஈரப்பதம் உள்ள இடங்களில் நுண்ணுயிரிகள் பெருகி அரிப்பு மற்றும் அதன் அடுத்த கட்ட பாதிப்புகளான சொறி, படர் தாமரை ஏற்படுகிறது. இதை போக்குவதற்கான எளிய குறிப்புகளை பார்க்கலாம்.

அரிப்பு நீங்க குப்பைமேனி. இது சாதாரணமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய ஒரு செடியாகும். குப்பைமேனி இலை, மஞ்சள் மற்றும் கல்லுப்பு இவை மூன்றையும் சேர்த்து அரைத்து அரிப்பு உள்ள இடங்களில் தடவி, அது காய்ந்த பிறகு குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.

அடுத்து வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் 3 இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை அரிப்பு உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து, மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.

நன்னாரி வேர் 20 கிராம் எடுத்துக் கொண்டு அதை 1/2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அது 200 மிலி அளவிற்கு சுண்ட விடவும். பிறகு அதை காலையில் 100 மிலி, மாலையில் 100 மிலி என குடித்து வந்தால் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

அருகம்புல் இதை ஜூஸ் போட்டும் குடிக்கலாம். அல்லது அரிப்பு உள்ள இடத்தில் இதன் சாற்றை சில துளி தடவி வந்தாலும் குணமாகும்.

கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து அரிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும். மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தினால் உடலில் உள்ள அனைத்து விதமான அரிப்புகளும் அதன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.