நம் முன்னோர்கள் காலத்தில் இரவு நேரத்தில் தலை மற்றும் தோப்புகளில் எண்ணெய் வைத்து படுப்பது வழக்கமாக இருந்தது.ஆனால் இன்று அந்த பழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
உடலில் உள்ள நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில் தான் உள்ளது.நரம்புகளில் ஆரோக்கியம் மேம்பட தொப்புளில் எண்ணெய் வைக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இயங்க மிக முக்கிய காரணம் நரம்புகள் தான்.எனவே இவைகள் ஒன்று சேரும் தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கும் நன்மைகள் கிடைக்கும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1)இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணியும்.
2)கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.கண் எரிச்சல்,கண் சூடு,கண் பார்வை குறைபாடு நீங்க தொப்பிளில் விளக்கெண்ணெய் வைக்க வேண்டும்.
3)உடல் சூடு தணிய தொப்புளில் நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
4)சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்க தொப்புளில் பாதாம் மற்றும் வைட்டமின் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
5)வயிறு எரிச்சல்,வயிறு பிடிப்பு இருந்தால் சிறிது தேங்காய் எண்ணெயை தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
6)நல்லெண்ணெயை தொப்புளில் வைத்தால் பாத வெடிப்பு,வறட்சி நீங்கும்.தொப்புளில் எண்ணெய் வைப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
7)மூட்டு வலி,நரம்பு வலி,உடல் சோர்வு நீங்க தொப்புளில் எண்ணெய் வைத்துவிட்டு உறங்கலாம்.