உங்களுக்கு அடிக்கடி உடல் வலி,உடல் அசதி பிரச்சனை இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்.உடல் மந்த உணர்வு நீங்க வெள்ளை எள்,பாதாம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை எள் – இரண்டு தேக்கரண்டி
2)பாதாம் பருப்பு – 10
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
**அடுத்து இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் 10 பாதாம் பருப்பை இதனுடன் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு அரைத்த வெள்ளை எள் பொடியை அதில் போட்டு நன்றாக கலக்கி குடித்து வந்தால் கை கால் வலி,முதுகு வலி,உடல் சோர்வு நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துண்டுகள் – அரை கப்
2)பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
3)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
4)ஏலக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
**முதலில் அரை கப் அளவிற்கு தேங்காய் துண்டுகள் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
**பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து பாத்திரம் ஒன்றிற்கு தேங்காய் பாலை வடிகட்டி கொள்ள வேண்டும்.
**அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
**பிறகு அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு ஏலக்காயை இடித்து தேங்காய் பாலில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
**பிறகு இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் உடல் வலி சோர்வு நீங்கும்.