Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

நோய்களை பரப்பும் கரப்பான் பூச்சிகள் வீட்டின் சமையலறையில் சிங்க்கில் தான் பதுங்கி வாழ்கிறது.கரப்பான் பூச்சி நடமாட்டத்தை ஆரம்ப நிலையில் ஒழித்துக் கட்டுவதே நல்லது.இதை விரட்ட பல முயற்சிகள் செய்தாலும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது பலரின் ஆதங்கமாக இருக்கின்றது.

கரப்பான் பூச்சிகளை ஒழிக்க கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தும் பொழுது அவை சில நேரம் நமக்கே ஆபத்தாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சி நடமாட்டத்திற்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை ஒன்று மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா

கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிடவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து ஒரு வாட்டர் பாட்டிலில் ஊற்றி மூடி போடவும்.

பிறகு வாட்டர் பாட்டில் மூடியில் சிறு சிறு துளைகளிட்டு கொண்டு கிட்சன் சிங்க் ஓட்டையில் ஸ்ப்ரே செய்துவிடவும்.இவ்வாறு செய்தால் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகள் துடிதுடித்து மடிந்துவிடும்.

அதேபோல் பச்சை மிளகாயை அரைத்து தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்தாலும் கரப்பான் பூச்சிகள் ஒழியும்.தூக்கி எறியும் ஆரஞ்சு பழத் தோலை காயவைத்து பொடித்து கிட்சன் மேடைகளில் தூவி விட்டால் அவற்றின் நடமாட்டம் கட்டுப்படும்.

புதினா எண்ணெயை வெது வெதுப்பான நீரில் கலந்து ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சி நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படும்.அதேபோல் டீ ட்ரீ எண்ணெயை கொண்டும் கரப்பான் பூச்சி கூட்டத்தை ஒழிக்கலாம்.

Exit mobile version