உங்களுக்கு சளி,காய்ச்சல்,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் இருந்தால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்க மருந்து குழம்பு செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)கொத்தமல்லி விதை – மூன்று தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)வெந்தயம் – அரை தேக்கரண்டி
5)கடுகு – அரை தேக்கரண்டி
6)உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி
7)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
8)பூண்டு பல் – இரண்டு
9)பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
10)கறிவேப்பிலை – ஒரு கொத்து
11)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
12)சின்ன வெங்காயம் – பத்து
13)சுக்கு – ஒரு துண்டு
14)வர மிளகாய் – மூன்று
15)ஓமம் – அரை தேக்கரண்டி
16)உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொத்தமல்லி விதை,வெந்தயம்,உளுந்து பருப்பு,ஓமம்,மிளகு,சுக்கு,வர மிளகாய்,சீரகம் உள்ளிட்டவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கொத்து கறிவேப்பிலையை தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.பிறகு 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு நறுக்கி கொள்ளவும்.
பிறகு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அதில் கடுகு சேர்த்து பொரியவிடவும்.
பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கி எடுக்கவும்.பிறகு அரைத்த பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வதக்கும் வெங்காயத்தில் ஊற்றி கலந்துவிடவும்.
அடுத்து மஞ்சள் தூள்,பெருங்காயத் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நேரம் குழம்பை கொதிக்கவிடவும்.பிறகு சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.இந்த மருந்து குழம்பு சளி,இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க உதவுகிறது.