Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொண்டை வலி கரகரப்பு நீங்க.. இந்த கசாயம் வச்சி ஒருவேளை குடிங்க!! 100% பலன் கிடைக்கும்!!

தற்பொழுது கடும் குளிர் நிலவி வருவதால் தொண்டை கரகரப்பு,தொண்டை வலி போன்ற பாதிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள கஷாயத்தை செய்து பருக வேண்டும்.

தொண்டை வலி காரணங்கள்:-

1)கடும் குளிர்
2)தீவிர சளி பாதிப்பு
3)இருமல்
4)இனிப்பு உணவு
5)தொற்று பாதிப்பு

தேவையான பொருட்கள்:-

1)இலவங்கப்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)துளசி இலை – பத்து
4)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்
6)கற்பூரவல்லி இலை – இரண்டு

செய்முறை விளக்கம்:-

**முதலில் இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகை தனி தனியாக உரலில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து பத்து துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

**பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலையை போட்டு கொதிக்க வையுங்கள்.

**பிறகு அரைத்த இலவங்கப்பட்டை பொடி மற்றும் கருப்பு மிளகு பொடியை போட்டு கொள்ள வேண்டும்.அடுத்து மஞ்சள் தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இவ்வாறு தொடர்ந்தது மூன்று தினங்கள் பருகி வந்தால் தொண்டை வலி,தொண்டை கரகரப்பு பாதிப்பு குணமாகும்.

**அதேபோல் தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் துளசி மற்றும் வெற்றிலையை கசக்கி சாறு பிழிந்து பருகி பலனடையலாம்.

**ஓமவல்லி கசாயம் செய்து குடித்தால் தொண்டை வலி,தொண்டை கரகரப்பு உள்ளிட்டவை குணமாகும்.

Exit mobile version