சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!!

0
186
#image_title

சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் சுளுக்கு பிடித்துக்கொண்டால் உடனே எண்ணெய் தடவி உறுவி விடுவார்கள். ஆனால் இன்று சுளுக்கு எடுத்து உறுவி விடவும் யாருமில்லை, அப்படி பாட்டி வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளவும், பின்பற்றவும் நேரம் இல்லை. நேரமே இருந்தாலும் அந்த முறையை பின்பற்ற மிகவும் பயப்படும் நிலை உருவாகிவிட்டது. சுளுக்கு பிடித்து விட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றிய எளிய முறையில் பார்க்கலாம்.

சுளுக்கு நீங்க ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது. ஜாதிக்காயை உடைத்து அதோடு சிறிது பால் சேர்த்து நான்கு அரைக்க வேண்டும். பிறகு அதை வெதுவெதுப்பாகும்வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும். ஒரு நாள் கழித்து அதை வெந்நீரில் கைவிட்டு மீண்டும் இதே போல பற்று போட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

ஆனால் எந்த செலவும் இல்லாமல் மிக எளிமையாக வீட்டிலேயே சுளுக்கை சரிசெய்ய நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து இரண்டையும் நன்கு இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டால் விரைவில் சுளுக்கு சரியாகும்.

பிரண்டையை நன்கு பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு காய்ச்சவேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் சுளுக்கு நீங்கும்.