கடன் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டும் தான் நிறைய குடும்பங்களை இன்று ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நிறைய இடங்களில் ஜாதகம் பார்ப்பதும், பல்வேறு கோவில்களுக்கு ஏறி இறங்குவதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
சிறியதாக கடை வைத்து தரமான பொருட்களை கொடுத்தாலும் கூட, அதனை பிடிக்காத பெரிய கடைக்காரர்கள் ஏதேனும் ஒரு செய்வினையை செய்து விடுகின்றனர். இவ்வாறு சிறிய பிரச்சனைகள் முதல் பெரிய பிரச்சனைகள் வரை உருவாகி பல்வேறு கண் திருஷ்டிகளும், செய்வினைகளும் உருவாகி விடுகின்றன.
கடன் தொல்லையில் இருந்து நீங்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் நீங்கவே முடியாது. அதற்கும் காரணம் தீய சக்திகள் தான். இது போன்ற கடன் பிரச்சனைகள், கண் திருஷ்டிகள் ஆகியவற்றில் இருந்து விடுபட ஒரு சிறிய எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம்.
குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, உடல்நிலை சரியில்லாமல் போவது, பண பிரச்சினைகள் ஏற்படுவது இது போன்ற அனைத்திற்கும் காரணம் கண் திருஷ்டி தான். இந்த கண் திருஷ்டி என்பது நமது குடும்பத்திற்கு இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியாது. இந்த கண் திருஷ்டியால் பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும் அனுபவிப்போம்.
இந்த கண் திருஷ்டி என்பது ஒரு கொடிய வினை. இந்த கொடிய வினையில் பல குடும்பங்கள் மாட்டிக் கொண்டு, ஏன் எதற்கு என தெரியாமலே இருக்கின்றனர். இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு எளிய பரிகாரத்தை செய்து அதற்கான தீர்வை காணலாம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒற்றை கண் உடைய தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் என்பது ஒவ்வொரு மனிதருடைய அகம்பாவத்தை அழித்து, ஆணவத்தை அழித்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தான் தேங்காய். ஆன்மீகத்தில் தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒரு பொருளாகும்.
பொதுவாக தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். அதாவது அந்த மூன்று கண்களில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பரிகாரம் செய்வதற்கு ஒற்றை கண் உடைய தேங்காயை எடுத்துக்கொண்டு, அதில் பச்சையாக கடையில் விற்கக் கூடிய மஞ்சளை வாங்கி, நமது வீட்டில் உள்ள நிறை குடத்தில் இருந்து நீர் எடுத்து, அந்த மஞ்சளை அரைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எடுத்துக் கொண்ட தேங்காயில் எந்த ஒரு நாரும் இல்லாமல் எடுத்துவிட்டு, நாம் அரைத்த மஞ்சளை பூசி, பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தேங்காயை ஒரு தாம்பூலத்தில் வைத்து, நமது பூஜை அறையில் வெள்ளைப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை செய்த பின்னர் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் அந்த அர்ச்சனை செய்த தேங்காய் தாம்பூலத்தை, நமது வீட்டின் நிலை வாசலின் முன்பாக, அதாவது வீட்டின் உள்பக்கமாக இரவு முழுவதும் வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த தேங்காய்க்கு விளக்கு ஏற்றி, பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து நமது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்பொழுது இந்த தேங்காயில் அனைத்து தேவதைகளின் சக்தியும் இறங்கி இருக்கும்.
இதனை நமது பூஜை அறையில் வைத்து, நாம் பூஜை செய்யும் பொழுதெல்லாம் அந்த தேங்காய்க்கும் தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள தீராத கடன் பிரச்சனை மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கிவிடும்.