Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டிலிருக்கும் இந்த 1 பொருள் இருந்தால் வலி இல்லாமல் மருக்களை நீக்கலாம்! உடனே ட்ரை பண்ணுங்கள்!

Get rid of warts painlessly with this 1 home remedy! Try it now!

Get rid of warts painlessly with this 1 home remedy! Try it now!

வீட்டிலிருக்கும் இந்த 1 பொருள் இருந்தால் வலி இல்லாமல் மருக்களை நீக்கலாம்! உடனே ட்ரை பண்ணுங்கள்!

மேனியில் மரு தோன்றினால் அவை உடல் அழகை குறைத்துவிடும்.இதனால் பலர் மருக்களை அகற்ற என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்.மருக்கள் உடலில் அனைத்து இடங்களில் தோன்றக் கூடியவை.

மருக்கள் ஓர் இடத்தில் வந்துவிட்டால் இதர பாகங்களுக்கு எளிதில் பரவிவிடும்.மருக்களை தொடுதல்,கிள்ளுதல் போன்ற செயல்கள் மூலம் மற்ற இடங்களுக்கு எளிதில் பரவிவிடும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு மருக்கள் ஏற்படுகிறது.உடலில் உருவாகும் மருக்களை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

தீர்வு 01:-

1)கிராம்பு
2)பேக்கிங் சோடா

பத்து கிராம்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு பேக்கிங் சோடா சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

அதன் பின்னர் சிறிது தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி கலந்து மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் ஓரிரு நாட்களில் அவை கொட்டிவிடும்.இந்த முறையை பின்பற்றினால் வலி இல்லாமல் மருக்களை அகற்றிவிட முடியும்.

தீர்வு 02:-

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்

50 மில்லி நீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைத்து மருக்கள் மீது பூசினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

தீர்வு:-

1)பூண்டு
2)இஞ்சி
3)எலுமிச்சை சாறு

இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

தட்டிய இஞ்சி,பூண்டில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மருக்கள் மீது பூசி வந்தால் ஒரே வாரத்தில் முழுமையான பலன் கிடைக்கும்.

Exit mobile version