பெண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! அதிகமாக வெள்ளைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்!!
வெள்ளைப்படுதல் நோய் என்பது பெண்களின் பிறப்பு உறுப்பில் வெளியே கெட்டியான வெண்ணிறமான நீர்மம் என்பார்கள். வெள்ளைப்படுதலுக்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் பொதுவாக ஈத்திரோசன் சமச்சீரற்ற தன்மை மற்றும் பாலியல் தொற்று காரணமாகவும் ஏற்படும்கிறது.
வெள்ளைப்படுதல் இயற்கையாகவே பெண்களுக்கு இது சாதாரண மற்றும் அசாதாரணம் என இரண்டு வகை உள்ளது. சாதாரண வெள்ளைப்படுதல் இளம் வயது பெண்கள் கர்ப்பிணி பெண்கள் பெண்களுக்கு ஏற்படுவதாகும். இது ஏற்பட காரணம் பிறப்பில் ஏற்படும் தொற்று காரணமும் அல்லது பாலியல் நோய் காரணமாகவோ இத்திரவும் அதிகம் வெளிப்படும்.
குறிப்பாக முதல் மாதவிலக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதியில் நிற்கும் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.
இதன் அறிகுறிகளாக நிறம், வாசனை, அளவு போன்றவைகள் அதிகமாக இருப்பது இதன் அறிகுறிகளாக அறியப்படுகிறது. மேலும் பிறப்பு உறுப்பில் அரிப்பு கால்களில் வலி போன்றவை அதிகமாக இருந்தால் வெள்ளைப்படுதல் அசாதாரணமானது உடனடியாக மருத்துவர் அணுக வேண்டும்.
வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணம் பாக்டீரியா ஈஸ்ட் போன்ற தொற்று கிருமிகள் பிறப்புறுப்பை பாதிப்பதால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மை மாற்றம் அடைகிறது இதில் நிறம்மற்ற நிலையில் வெளிப்படும் திரவம் சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களில் வெளிப்படும்.
சில சமயம் வெள்ளைப்படுதல் காரணமாக யோனி தசையில் எரிச்சல் வீக்கம் ஏற்பட்டு அலர்ஜி வளர்ச்சி ஏற்படுகிறது
வெள்ளைப்படுதல் ஏற்படும்போது உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால் கூட வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவு உண்ணாமல்தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.
வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை சிந்தித்து அதற்கான தீர்வுகளை உடனடியாக எடுக்க வேண்டும்.