Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

#image_title

மூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், துரித ;உணவுகளால் ஆசன வாய் பகுதியில் மூல(பைல்ஸ்) நோய் உருவாகிறது.

உடலுக்கு போதிய தண்ணீர் அருந்தாமல் இருந்தால் மலம் வறண்ட நிலையில் வெளியேறும்… இதனால் ஆசனவாய் பகுதியில் புண் ஏற்பட்டு அவை மூல நோயாக மாறுகிறது.

நார்ச்சத்து குறைபாட்டால் மலச்சிக்கல்… ஏற்பட்டு மலம் வெளியேறாமல் இருக்கும். இதனாலும் பைல்ஸ் பிரச்சனை ஆரம்பமாகும்.

மூல நோய் அறிகுறி…

*இரத்தம் கலந்த மலம்
*மலம் கழிக்கும் பொழுது ஆசன வாயில் வழி
*ஆசன வாய் வீக்கம், அரிப்பு

இந்த பைல்ஸ் பாதிப்பை சரி செய்ய சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயத்தை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

பச்சையாக சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். இவை இரண்டும் குளிர்ச்சி நிறைந்த பொருட்கள் என்பதினால் மூல நோய் விரைவில் குணமாகும்.

தேவையான பொருட்கள்…

*வெங்காயம்
*வெந்தயம்
*தண்ணீர்

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு 2 சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்தயப் பொடி மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதினால் மூல நோய் குணமாகும்.

Exit mobile version