இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ்!

0
116

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின்போது தவிர்க்க முடியாத பணிகளுக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை மாநில அரசு கொண்டுவந்தது.ஆனால் அண்மையில் இ-பாஸ் வழங்குவதில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு காரணமாக இந்த இ-பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம்
தேதியன்று தமிழக அரசு
ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு,மற்றும் தொலைபேசி எண்களை,இ-பாஸ்-ற்கு அப்ளை (apply) செய்யும் பொழுது இணைத்தால் அனைவருக்கும் நிச்சயமாக இ-பாஸ் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் இந்த இ-பாஸ் திட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுமென்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பல தளர்வுகளுடன் இ-பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.இ -பாஸ்
அப்ளைசெய்யும் பொழுதும் ஆதார் கார்டு அல்லது ரேஷன்கார்டை இணைத்து அப்ளை செய்தால் உடனடியாக அனைவருக்கும்
இ- பாஸ் வழங்கப்படுமென்று தமிழக அரசுஅறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையே மக்கள் கருத்தில் கொண்டு பின்பற்ற வேண்டுமென்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். நோய்த்தொற்றை பரப்பும் வகையில் மக்கள் அலட்சியம் காட்டாமல், பாதுகப்புடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும்,இதற்காக மக்கள் அரசிற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.