Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 நிமிஷத்துல ஃபுல்லா சார்ஜர் ஆகும்! – மாஸ் காட்டும் இன்ஃபினிக்ஸ் கான்செப்ட்!

இன்ஃபினிக்ஸ் அறிமுகம் செய்யும் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் பல வகையான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய அறிமுகங்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் என் போனிக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் பத்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லியிருந்தது.

 

இந்நிலையில் 160 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதியை இன்பினிக்ஸ் தனது வழங்கி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஃபாஸ்ட் சார்ஜர் தொழில் நுட்பமானது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் வசதியை கொண்டுள்ளது. எனவே உலக மக்களின் எதிர்பார்ப்பை இது தூண்டியுள்ளது.

 

இந்த இன்ஃபினிக்ஸ் கான்செப்ட் 2021 மாடலில் புதிய வகையான பல்வேறு அம்சங்களும் உள்ளன என்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.குறிப்பாக இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடல் ஆனது 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மிகவும் டிஸ்பிளே பெரியதாகவும் மிகவும் பாதுகாப்பான டிஸ்ப்ளே யுடனும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

8 ஜிபி ரேம் 128 ஜிபி ரோம் மெமரி வசதியை கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் 64 பிட் ஆக்டோ பிராசசர் கொண்டுள்ளது.

 

இந்த இன்ஃபினிக்ஸ் மாடலில் பின்புறம் 48எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா உள்ளது எனவே இது மிகவும் வளரக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது வெளிவந்தால் மக்களால் கவரப்படும் என்பதற்கு ஆச்சரியமில்லை என்று சொல்லி வருகிறது.

 

மிகவும் அப்டேட் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. கம்மி விலையில் எத்தனை புதிய அம்சங்களுடன் ஒரு போன் கிடைத்தால் இனி மக்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டு தான்.

Exit mobile version