Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்காளர் அட்டை பெறுவது இனி ஈஸி! இந்த லிங்க்கை மட்டும் கிளிக் செய்யுங்கள் போதும்!

#image_title

வாக்காளர் அட்டை பெறுவது இனி ஈஸி! இந்த லிங்க்கை மட்டும் கிளிக் செய்யுங்கள் போதும்!

18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்காளர் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது. அதற்குள் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளவும்.

வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதி:

*இந்திய குடினமாக இருக்க வேண்டும்.

*18 வயது அல்லது அதற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே வாக்காளர் அட்டை பெற விண்ணப்பம் செய்ய முடியும்.

வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2)ஆதார்
3)ரேஷன் கார்டு
4)இபி கட்டண ரசீது
5)பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்
6)18 வயதை பூர்த்தியடைந்ததற்கான சான்றிதழ்
7)பான் கார்டு

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் போட்டோ எடுத்து ஆவண நகலாக மாற்றவும். இந்த ஆவணம் PDF அல்லது JPG வடிவத்திற்கு மாற்றவும்.

*பிறகு https://www.nvsp.in என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு செல்லவும்.

*படிவம்-8 என்பதை கிளிக் செய்து தங்கள் விவரத்தை குறிப்பிடவும்.

*அதன் பின்னர் கேட்கப்பட்டுள்ள ஆவண நகலை பதிவேற்றவும். பிறகு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு உறுதிப்படுத்தப்பட்ட குறுந்தகவல் ஒன்று வரும். விண்ணப்பித்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தபால் மூலம் வாக்காளர் அட்டை உங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விடும்.

Exit mobile version