இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்!!! இதை காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!

0
79

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்!!! இதை காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!

இந்திய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்யை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாலில் இருந்து நமக்கு கிடைக்கும் நெய்யானது அனைத்து வகையான உணவுப் பொருள்களுக்கும் சுவையை அதிகரித்து கொடுக்கும். இந்த நெய்யின் சுவாசமே உணவை அதிகமாக சாப்பிட தூண்டும்.

உணவுப் பொருளில் முக்கியமான உணவுப் பொருளாக பார்க்கப்படும் நெய் அழகுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. பாலில் இருந்து தயாரிக்கும் நெய்யில் ஒமேகா 3, ஃபேட்டி ஆசிட் சத்துக்கள், ஃபியூட்ரிக் ஆசிட் சத்துக்கள், விட்டமின் ஏ, நல்ல கொழுப்புகள், புரதச்சத்து, ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள், கால்சியம், அமினோ அமிலங்கள் ஆகியவை அதிகமாக உள்ளது. இந்த நெய்யை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று பார்க்கலாம்.

நெய்யை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…

* நெய்யை சிறிதளவு அதாவது ஒரு ஸ்பூன் எடுத்து காலையில் சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

* காலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் வயிற்றுப் புண் குணமாகும்.

* தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றுகின்றது.

* தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் உள்ள அமிலங்களின் அளவை குறைக்கின்றது.

* தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் சாப்பிட்டு வந்தால் நமது ஏற்படும் செரிமான பிரச்சனை குணமாகின்றது. மேலும் செரிமானம் மேம்படும்.

* தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவு நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாக்குகின்றது.

* இதில் கால்சியம், அமினோ அமிலங்கள் ஆகிய சத்துக்கள் உள்ளது.இதனால் இதை காலையில் தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.