வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!

0
130

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இஞ்சி சட்னி! இஞ்சியின் மற்ற பயன்கள் என்ன!!

 

நமக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு, அஜீரணம், வயிற்று கோளாறு, வயிற்றுப்புண் போன்ற வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்கக் கூடிய ஒரு வகை சட்னியை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

நமக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்க இந்த சட்னியை செய்ய தேவையான மூலப்பொருள் இஞ்சி ஆகும். இந்த இஞ்சியை வைத்து இந்த சட்னியை எவ்வாறு செய்வது மேலும் இஞ்சியின் பயன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இந்த சட்னியை செய்யத் தேவையான பொருள்கள்…

 

* இஞ்சி

* வெங்காயம்

* காய்ந்த மிளகாய்

* புளி

* தேங்காய்

* கொத்தமல்லி

 

இந்த சட்னியை தயார்  செய்யும் முறை…

 

முதலில் இஞ்சியை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தையும் தோல்நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்துக் கொள்ளவும். அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும்.

 

பின்னர் இதில் புளி ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். இறுதியாக இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

 

பின்னர் இதை ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வயிற்றுப் பிரச்சனையை சரி செய்யும் இஞ்சி சட்னி தயாராகி விட்டது. இதை இட்லி, தோசை போன்றவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.

 

இஞ்சியின் பிற நன்மைகள்…

 

* இஞ்சியை அரைத்து சாறு எடுத்து அதில் வெல்லம் சேர்த்து சாப்பிட வாதக்கோளாறுகள் நீங்கும்.

 

* இஞ்சியை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் சரியாகும்.

 

* இஞ்சியை புதினாவோடு சேர்த்து சாப்பிட்டால் வாய்நாற்றம், அஜீரணக் கோளாறு, பித்தம் ஆகியவை குணமடையும். மேலும் நமக்கு சுறுசுறுப்பு ஏற்படும்.

 

* காலை நேரத்தில் இஞ்சி சாற்றில் உப்பு கலந்து மூனறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த தலைசுற்று குணமடையும். மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

 

* பத்து கிராம் இஞ்சியை பூண்டுடன் சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.

 

* இஞ்சி ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகின்றது.

 

* இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகின்றது.

 

* பெருங்குடல் புற்றுநோயை தடுக்கின்றது.

 

* தசை வலியை குறைக்கின்றது.