Gingivitis: பல் ஈறுகளில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? இதை உடனே ட்ரை பண்ணுங்கள்!

0
199
Gingivitis: Need a permanent solution to frequent inflammation of the gums? Try it now!

Gingivitis: பல் ஈறுகளில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? இதை உடனே ட்ரை பண்ணுங்கள்!

பல்,ஈறுகளில் வலி,வீக்கம் ஏற்படுவது வேதனையான ஒன்று.இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால் வாயை திறக்க,சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும்.பொதுவாக ஞானப்பால் உருவாகும் போது ஈறு வீக்கம் ஏற்படும்.

மேலும் சொத்தைப்பல்,ஈறு பிரச்சனை,பாக்டீரியா தொற்று இருப்பவர்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும்.இதை குணமாக்க வாய்வழி சுகாதாரம் அவசியமான ஒன்று.சர்க்கரை நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும்.உணவு உட்கொண்ட பின்னர் வாயை கொப்பளிக்க வேண்டும்.புகை பழக்கம்,சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள்.

பல்,ஈறு வீக்கம் குணமாக எளிய வழிகள்:

1)ஹைட்ரஜன் பெராக்ஸைடு மவுத்வாஷ் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்து வந்தால் பல்,ஈறு வீக்கம் குணமாகும்.

2)மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி பற்களை துலக்கி வந்தால் பல்,ஈறு பாதிப்பு நீங்கி அவை உறுதியாகும்.

3)வெந்நீரில் கல் உப்பு போட்டு வாயை கொப்பளித்து வந்தால் பல்,ஈறு வீக்கம் முழுமையாக குணமாகும்.

4)கரு மிளகை பொடியாக்கி கடுகு எண்ணெயில் குழைத்து பற்களை துலக்கி வந்தால் பல்,ஈறு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக அகலும்.

5)கிராம்பை இடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு பல் ஈறுகளை தேய்த்து வந்தால் அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

6)பாதாம் பருப்பை எரித்து பொடியாக்கி பற்களை துலக்கி வந்தால் பல்,ஈறு வீக்கம் குணமாக்க.