Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயில் நிலையத்தில் தாயின் தவறான செயல் : பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!!

சேலம் மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ளது ஆத்தூர் ரயில் வண்டி நிலையம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இங்கு சரக்கு வண்டிகளை தவிற மற்றவை வருவதில்லை.

இந்த நிலையில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு ஒரு பெண் தன்னுடைய 3 வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளார். நதியா என்ற அந்த பெண் குழந்தை தாயின் கண் முன்னே அங்கும் இங்குமாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. தன்னுடைய குழந்தை இங்கு தானே விளையாடி கொண்டு இருக்கிறது என்று கவனக்குறைவாக இருந்துள்ளார்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒரு குழந்தையின் மீது மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தது.

அந்த குழந்தையின் தாய் கவனமாக இருந்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று அங்கு இருந்தவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Exit mobile version