Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு சமயத்தில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் திருச்சி மாவட்டத்தில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். 9 வயதாகும் இவருடைய மகள் வீ.பூசாரிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமி அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மல்லிகை பூந்தோட்டத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறுமி இவ்வாறு அடிப்பட்டு கிடப்பதை பக்கத்து வீட்டு 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளான்.

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News
Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

இதனையடுத்து சிறுமியை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் அங்கு ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த ஒரு உடையை கைப்பற்றியுள்ளனர். மேலும் இது பற்றி விசாரித்த போது சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனின் சட்டை தான் இது என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் இது குறித்து சிறுவனிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளான். விளையாடுவதற்காக சிறுமியை அருகிலுள்ள தோப்பிற்கு அழைத்து சென்ற அந்த சிறுவன் செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.

இதை சற்றும் எதிர்பார்க்க அந்த சிறுமி இதை அம்மாகிட்ட சொல்லிவிடுவேன் என்று அழுதிருக்கிறார். இதனால் பயந்த சிறுவன் செய்த தவறை மறைக்க சிறுமியை கீழே கிடந்த கல்லை எடுத்து அடித்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News
Girl murdered by Young Boy in Trichy-News4 Tamil Online Tamil News

பின்னர் அந்த சிறுவன தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி சிறுமியின் மீது போட்டுவிட்டு  வீட்டுக்கு சென்றுள்ளான். அதன் பிறகு தான் எதுவும் தெரியாதது போல் தோட்டத்தில் சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக  அக்கம் பக்கமுள்ளவர்களிடம் கூறி நாடகம் ஆடினேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை கைது செய்தனர். 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலை தடுத்ததால் 14 வயது சிறுவன் அடித்து கொலை செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போல நாடகம் ஆடி மக்களையும் காவல் துறையினரையும் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனையடுத்து அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

Exit mobile version