Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

லோன் கட்ட தவறிய இளம்பெண்:! அந்தப் பெண்ணின் அந்தரங்க போட்டோக்களை அனுப்பிய நிறுவனம்!

கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர்,செலவிற்கே பணம் இல்லாத காரணத்தால்,ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் லோன் எடுக்க முயற்சி எடுத்துள்ளார்.அந்தவகையில் ஐ கிரிடிட் என்ற அப்ளிகேஷன் மூலம் அவர் 20 ஆயிரம் ரூபாய் லோன் பெற்றுள்ளார்.

20 ஆயிரம் ரூபாய் பணத்திருக்கு ரூபாய் 7000 வட்டியுடன் அடுத்த ஏழு நாட்களில் திருப்பிச் செலுத்துவதற்கான ஆப்ஷனை அவர்தேர்வு செய்திருந்தார்.ஆனால் அவர் தேர்வு செய்த ஆப்ஷனை போன்று 7 நாட்களில் பணம் கட்ட தவறிவிட்டார்.

இதனால் அவருக்கு பணத்தை கட்டச் சொல்லி தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளது. மேலும் அதன் கூடவே அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிருக்கு அவர் குறித்த அந்தரங்க புகைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

அதாவது அந்த அப்ளிகேஷன் மூலம் லோன் எடுத்து கட்ட தவறினால்,இது போன்ற செயலில் ஈடுபட்டு பணம் வசூலிப்பதை அந்த அப்ளிகேஷன் வாடிக்கையாக கொண்டு இருந்திருக்கின்றது.

இதுபோன்ற அந்தரங்க வீடியோக்களை கண்டு பயப்படாமல் அந்த பெண்மணி தைரியமாக இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Exit mobile version