Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!! 

காதலை ஏற்றுக் கொள்ளாத காதலியின் தந்தை!! அதற்கடுத்து நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

காதலியின் தந்தை காதலை மறுத்த நிலையில் அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் தான் காதலி வீட்டில் காதலன் தூக்கி தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணையில் அந்த நபரின் பெயர் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அந்தப் பெண்ணின் தந்தை இவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவு செய்தனர். இதை தெரிந்து கொண்ட அந்தப் பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இக்பால் தான் காதலித்த பெண்ணின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார். இதை அறிந்த இக்பால் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இக்பாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version