ஆன்லைன் மூலம் வரன் தேடும் பெண்களே உஷார்!! இப்படியும் ஏமாற்றலாம் தொடர் திருமணம் செய்த மோசடி மன்னன்!!
ஆன்லைன் மூலம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண மன்னன் பற்றிய தகவல் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்யும் இந்த நபர் விதவைகள் மற்றும் திருமணமாகாத பெண்களை மாற்றி மாற்றி திருமணம் செய்து பின்னர் பணம் நகைகளை கொள்ளை அடித்து வந்த மோசடி பேர்வழி ஒருவரை மைசூர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பன்னசங்கரி என்ற இடத்தில் வசித்து வருபவர் மகேஷ் கே.பி நாயக் வயது 34. இவர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரன் தேடும் பெண்களை குறி வைத்து திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி நகை, பணம் கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்டுள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை இதுவரை சுமார் 12க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் இவருக்கு ஆறு குழந்தைகள் கூட உள்ளனர்.
மேலும் 5 வகுப்பு மட்டுமே படித்துள்ள மகேஷ் ஆன்லைனில் தன்னை ஒரு இன்ஜினியர் என்றும் டாக்டர் என்றும் ஐடி உருவாக்கி இணையதளம் வழியாகவே பெண்களை தொடர்பு கொண்டு திருமணம் செய்து உள்ளார். பெண்களை நம்ப வைப்பதற்காக தும்கூர் பகுதியில் போலி கிளினிக் ஒன்றையும் கூட நடத்தி வந்துள்ளார்.
பொருளாதார ரீதியாக வசதியான பெண்களாக தேர்வு செய்யும் மகேஷ் அவர்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார். அவர்களிடம் தன்னுடைய தேவைகள் தீர்ந்தவுடன் வேறு ஒரு புதிய ஊரில் புதிய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அப்படி இதுவரை சுமார் 12 பெண்களை இவர் ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது. இதில் ஏராளமான பெண்கள் புகார் கொடுக்க தயங்கிய நிலையில் மைசூரை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் அளித்ததின் பேரில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 லட்சம் ரொக்கம், 2 கார்கள், ஒரு வளையல், ஒரு மோதிரம், 2 தங்க வளையல், 1 நெக்லஸ், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
12 முறை திருமணம் செய்ததில் அவருக்கு ஆறு பெண்கள் மூலம் குழந்தைகள் உள்ளனர். எளிதில் பணத்தை சம்பாதிக்கலாம் என்பதால் அவர் திருமணத்தை தேர்ந்தெடுத்துள்ளார். பணக்கார பெண்களாக திருமணம் செய்தால் சுகபோகமாக வாழலாம் என்று நினைத்து திருமணம் செய்து தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.