Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே ரெடியா.. இவர்களுக்கும் இனி ரூபாய் 1000!! தமிழக அரசு உறுதி உடனே விண்ணப்பியுங்கள்!!

Girls ready.. Rs 1000 for them too!! Tamil Nadu Govt Confirmed Apply Immediately!!

Girls ready.. Rs 1000 for them too!! Tamil Nadu Govt Confirmed Apply Immediately!!

பெண்களே ரெடியா.. இவர்களுக்கும் இனி ரூபாய் 1000!! தமிழக அரசு உறுதி உடனே விண்ணப்பியுங்கள்!!

தமிழ் நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மகளிர் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 1,000 செலுத்தப்படும் என அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பெண்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது.அதன் அடிப்படையில், இதற்கு முன்பு இருந்த மூவலூர் ராமமிர்தம் அவர்களின் பெயரால் வழங்கப்பட்டு வந்த திருமண உதவி திட்டமான “தாலிக்கு தங்கம்” மூலம் ஏழை பெண்கள் பலர் பயனடைந்தனர்.ஆனால் அவர்களின் கல்லூரி வாழ்க்கை தடைப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்யும் விதமாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இதை மாற்றியமைத்து “புதுமைப் பெண் திட்டம் “என பெயர் சூட்டினார்.இதன் வழியாக அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-வகுப்பு வரை படித்து விட்டு உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எல்லோரது வங்கி கணக்கிலும் ரூபாய் 1000 வழங்கப்படும் எனவும் இது இவர்கள் கல்லூரி படிப்பு முடியும் வரை தொடர்ந்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் இருந்தது,தற்பொழுது 2024-25ஆம்‌ கல்வியாண்டு முதல்‌’புதுமைப்‌ பெண்‌” திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைதிற்கும் விரிவுபடுத்தப்படுள்ளது.

சென்னை மாவட்டதில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து காலேஜ் சேர போகும் பெண்கள் கல்வி உதவி தொகையை பெற, அதற்கான விண்ணப்பத்தை நோடல் ஆஃபிஸரிடம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

Exit mobile version