அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!!

0
153
Girls who took a fun bath in the waterfall!! A tragic incident happened to 6 women!!

அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!!

குற்றாலம் அருவியில் குளித்த போது 6 பெண்களின் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். இதில் குளித்து வந்தால் ஏராளமான வியாதிகள் தீரும் என சொல்லப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள இந்த குற்றாலம் பகுதிக்கு வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்த சூழ்நிலையில் குற்றாலம் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் நேற்று வாரவிமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் குளிக்க ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். அதிக கூட்டம் என்பதால் காத்து நின்று குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இங்கு உள்ள ஐந்தருவியில் குளிக்க பட்டுகோட்டை நாட்டுசாலை பகுதியைச் சேர்ந்த பிரமநாயகம் என்பவரது மனைவி வளர்மதி(வயது58), சற்குணம் மனைவி சரோஜா(70), பிரபாகரன் மனைவி வானஜோதி(60), சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி பரமேஸ்வரி(58), நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த நாராயணன் மனைவி அய்யம்மாள்(31), சிவகங்கை மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய 6 பெண்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

அப்போது அந்த 6 பெண்களின் நகைகளும் திடீரென மாயமானது. மொத்தம் 32 ½ பவுன் நகைகள் மாயமானதாக குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ள சூழ்நிலையில் குளித்தால் தண்ணீரில் நகைகள் அறுந்து இழுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம். ஆனால் தற்போது குறைவான தண்ணீர் அருவியில் விழுவதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகைகளை அபேஸ் செய்தனரா?? என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அருவி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.