Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!

Give arms to outsiders in Kashmir! Controversial speech of BJP MLA!

Give arms to outsiders in Kashmir! Controversial speech of BJP MLA!

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதுவும் அப்பாவிகளான வெளிநபர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் முதல் வாரத்தில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இதேபோல் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் பானிபூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார். இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று புல்வாமாவில் ஷகீல் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளினால் சுடப்பட்டு உள்ளார். இவருக்கு உத்திரபிரதேசத்தின் சஹரன்பூர் நகரை சேர்ந்தவர்.

பலத்த படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில் காஷ்மீரைச் சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர்.

முதல்கட்ட விசாரணையின் போது அவர்கள் ராஜா ரேஷி தேவ் மற்றும் ஜோகிந்தர் ரேஷி தேவ் என தெரிய வந்துள்ளது.  சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார். இவர்கள் மூன்று பேருமே பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதை சிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளினால் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

அதன் பின்பு காஷ்மீர் கவர்னரை மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். பண்டிகை காலங்களில் தொடர்ந்து அங்கு இவ்வாறு அடுத்தடுத்து பொதுமக்கள் படுகொலை செய்வது அதிகரித்து வருவது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஞானேந்திர சிங் ஞானு இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அல்லாத நபர்களுக்கு மத்திய அரசு ஆயுதங்களை வழங்க வேண்டும்.

இதனால் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் என்று கூறியுள்ளார். இது போன்ற பயங்கரவாதிகள் கோழைகள். அவர்கள் ஏழைகள் மற்றும் வசதியற்ற நபர்களைத் தாக்கி அதன் காரணமாக அச்ச சூழலை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version