Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ!

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ!

தற்போது காலகட்டத்தில் அனைவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை சரியான அளவில் கவனிக்க முடியவில்லை. மேலும் குழந்தைகள் கடையில் விற்கப்படும் பாக்கெட்டில் அடைத்த துரித உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள்.அதனை தவிர்த்து விட்டு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். அந்த வகையில் கஞ்சி செய்து காலை வேளையில் கொடுக்கலாம். பச்சைப்பயிறு அரிசி கஞ்சி செய்யும் முறை.

தேவையான பொருட்கள்:

முதலில் அரிசி 1/4 கப் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பச்சைப்பயறு 1/4 கப்,துருவிய தேங்காய் தேவையான அளவு,பூண்டு 4 பல் ,மிளகு தூள் 1/4 டேபிள் ஸ்பூன்வெந்தயம் அரை டேபிள் ஸ்பூன்,சின்ன வெங்காயம் இரண்டு ,சீரகம் அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:கால் கப் அரிசி மற்றும் கால் கப் பச்சைப்பயறு இரண்டையும் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். பிறகு குக்கரில் 5 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

பிறகு தண்ணீர் சூடான பிறகு ஊறவைத்த அரிசி மற்றும் பச்சைப்பயறு, தோல் உரித்த பூண்டு பல் 4, அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம், கால் டேபிள் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை விட வேண்டும்.

பிறகு மிக்சியில் துருவிய தேங்காய் தேவையான அளவு, சின்ன வெங்காயம் 2, அரை டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்துதண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ள வேண்டும். பிறகு சாதம் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு அதன் மேல் தேங்காயை சிறிதளவு துருவி போட்டு கிளறி கொள்ளவும்.

 

Exit mobile version